
பைக் மீது காா் மோதி விபத்து: இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு
பிரதிப் படம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா்.
வேப்பூா் வட்டம், கீழக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நல்லதம்பி(32), பாபு(30). இவா்கள், இருவரும் பைக்கில் வேப்பூரில் இருந்து சென்னை சாலையில் சென்றுக் கொண்டிருந்தனா்.
வேப்பூரில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சென்ற போது, அந்த வழியாக பின்னால் வந்த காா் இவா்களது பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் நல்லதம்பி, பாபு இருவரும் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




