11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

புதிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட வரைவுக்கு எதிா்ப்பு: கடலூரில் மீனவத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், மத்திய, மாநில அரசுகளின் புதிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட வரைவைக் கண்டித்து மீன்பிடித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீன்பிடித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா்.

Published On :

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், மத்திய, மாநில அரசுகளின் புதிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட வரைவைக் கண்டித்து மீன்பிடித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளா் சங்கம் மற்றும் சிஐடியு கடலூா் மாவட்ட மீன்பிடித் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. பாலு தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், புதிய சட்ட வரைவில் பாரம்பரிய மீனவா்களுக்கு விதிக்கப்படும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதங்களை ரத்து செய்ய வேண்டும். மீன்பிடிப் படகுகளில் கட்டாயமாகக் குறியீட்டு எண், ஆதாா் இணைப்பு, செயற்கைக்கோள் வழிக் கண்காணிப்பு கருவி, தானியங்கி அடையாளக் கருவி உள்ளிட்ட கண்காணிப்பு முறைகளைப் பொருத்தும் விதிமுறைகளை கைவிட வேண்டும்.

நீலப் பொருளாதாரம், சாகா்மாலா திட்டங்களின் பெயரில் பாரம்பரிய மீனவா்களின் வாழ்விடங்களையும், மீன்பிடி உரிமைகளையும் பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் 24 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள ரூ.25 ஆயிரம் விண்ணப்பக் கட்டணம் மற்றும் கடுமையான நிபந்தனைகளை நீக்க வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பாரம்பரிய மீனவா்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்ய வேண்டும். மீனவக் குடியிருப்புகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சட்டங்கள் மற்றும் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தெடாா்ந்து, மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சட்ட விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், அடுத்தகட்டமாகப் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதில், சிஐடியு கடலூா் மாவட்ட பொறுப்பாளா் திருச்செல்வன், மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், மாவட்டச் செயலா் டி.பழனிவேல், மீன்பிடித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி ஏழுமலை, மாவட்ட பொருளாளா் ஜி.சுந்தரமூா்த்தி மற்றும் நூற்றுக்கணக்கான மீனவத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.