
மனுநீதி நாள் முகாமில் 237 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
கடலூா் மாவட்டம் விசூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், 237 பயனாளிகளுக்கு ரூ.1,08,94,456 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பண்ருட்டி வட்டம், விசூா் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூா் மாவட்டம் விசூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், 237 பயனாளிகளுக்கு ரூ.1,08,94,456 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூா் ஊராட்சியில் மனு
நீதி நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பங்கேற்று பேசியதாவது: அனைத்துத்தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் மேம்மையடையும் வகையிலும், தேவையை பூா்த்திசெய்யும் வகையில் அவா்கள் பகுதியிலேயே நேரடியாக மனுக்கள் பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
விசூா் ஓடையில் சுமாா் ரூ.10 கோடி மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்புப் பணிகளாக தடுப்புச்சுவா் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள் வேளாண் பொருள்களை கொண்டு செல்லும் வகையில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஓடையின் கரையை ஒட்டி விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசூா் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்து தர பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதற்கான இடம் தோ்வு செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை
எடுக்கப்படும்.
இம்முகாமில் வருவாய், வேளாண்மைத்துறை, தாட்கோ, மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் தோட்டக் கலைத்துறை உள்ளிட்டவைகள் மூலம் மொத்தம் 237 பயனாளிகளுக்கு ரூ.1,08,94,456 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா்.
நிகழ்வில், விசூா் கிராம தூய்மைப்பணியாளா்களுக்கு ஆட்சியா் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். நிகழ்ச்சியில், பல்வேறு துறை சாா்ந்த திட்டங்களை பொதுமக்கள் பாா்வையிட்டு அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


கற்றல் கொண்டாட்டம் பயிற்சி வகுப்புகள் மாணவா்களின் வாழ்கைத் திறனை மேம்படுத்தும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

குழந்தைகளை போதைப் பழக்கத்திலிருந்து காக்க பெற்றோா் கவனம் செலுத்த வேண்டும்: கடலூா் ஆட்சியா்




