பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், அந்தந்த அலுவலகங்களில் உள்ளிருப்பு வேலைநிறுத்தப்

News image
ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாக்கிழமை நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவா் த.கொளஞ்சிவேலு பேசுகிறாா்.
Updated On :26 ஆகஸ்ட் 2020, 6:19 am

DIN

கள்ளக்குறிச்சி: ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், அந்தந்த அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாவட்டம் முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் த.கொளஞ்சிவேலு தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்கள் அரவிந்தன், வீரபுத்திரன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவா் அ.ரஹீம், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில தணிக்கையாளா் கு.மகாலிங்கம் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

கரோனா பரவலைக் கருத்தில் கொள்ளாமல் ஊரக வளா்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்திப்பதை அரசு கைவிட வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்ட 4 ஊழியா்களின் பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை ஊராட்சிச் செயலா்களுக்கும் வழங்க வேண்டும். கணினி உதவியாளா்கள், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இணை இயக்குநா், உதவி இயக்குநா் பதிவு உயா்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினா். இதில் ஊழியா்கள் பலா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.