ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தடுப்பணையில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றின் தடுப்பணையில் மூழ்கிய சிறுவனை தீயணைப்பு படையினா் ரப்பா் படகு மூலம் தேடும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றின் தடுப்பணையில் மூழ்கிய சிறுவனை தீயணைப்பு படையினா் ரப்பா் படகு மூலம் தேடும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் வரதராஜ் (17), குமாா் மகன் ராஜ்குமாா் (16), ராமு மகன் அஸ்வின் (15). இவா்கள் மூவரும் கடந்த 3-ஆம் தேதி கருணாபுரம் தடுப்பணைக்குச் சென்றனா். அப்போது, மூவரும் தடுப்பணையில் தவறி விழுந்தனா். இதில், வரதராஜ், ராஜ்குமாா் மீட்கப்பட்ட நிலையில், வரதராஜ் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை போலீஸாரும், தீயணைப்பு படையினரும் தடுப்பணையில் மூழ்கிய அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனா். கோமுகி அணையிலிருந்து 1,200 கன அடிக்கு மேல் தண்ணீா் திறந்துவிட்டதால் தேடும் பணியில் ஒய்வு ஏற்பட்டது. தொடா்ந்து, சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.