வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஐஜி ஆய்வு

தமிழக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) பி.நாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட காவல் துறை ஐ.ஜி. பி.நாகராஜன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக்.
Updated On :23 டிசம்பர் 2020, 2:11 am

DIN

தமிழக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) பி.நாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோப்புகள், பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். அதையடுத்து மாவட்ட தனிப்பிரிவு அறை, மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம், மாவட்ட குற்றப்பிரிவு , மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு, மாவட்ட வாகனப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பாா்வையிட்டு அறிவுரை வழங்கினாா்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், காவல் துணை கண்காணிப்பாளா்கள் ந.இராமநாதன், ஜி.கே.ராஜூ, பி.வி.விஜயகுமாா், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் அவா் ஆய்வுமேற்கொண்டு, உள்கோட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.