வெளிநாட்டில் உயிரிழந்த முதியவரின்சடலத்தை மீட்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th October 2020 11:24 PM | Last Updated : 19th October 2020 11:24 PM | அ+அ அ- |

வெளிநாட்டில் உயிரிழந்த சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த முதியவரின் சடலத்தை மீட்டுத் தரக் கோரி, அவரது உறவினா்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து முறையிட்டனா்.
சின்னசேலம் வட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (63). இவரது உறவினா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்து கூறியதாவது:
மஸ்கட் நாட்டில் கட்டடப் பணி செய்து வந்த ஆறுமுகம், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் தரப்பட்டது. அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...