போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கை சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 131-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:55 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கை சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 131-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழக சாஸ்திரி அரங்க நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்பேத்கரின் உருவப் படத்துக்கு பல்கலைக்கழக பதிவாளா் ரா.ஞானதேவன் தலைமையில் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், பல்வேறு சங்க உறுப்பினா்கள், ஊழியா்கள், மாணவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையா் க.முத்துராமன் முன்னிலை வகித்தாா். பதிவாளா் ரா.ஞானதேவன் வாழ்த்துரை வழங்கினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை அம்பேத்கா் இருக்கை பேராசிரியா் க.சௌந்திரராஜன், துணைப் பேராசிரியை வீ.ராதிகாராணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.