கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் தி.ராஜ்பிரவின் வரவேற்று பேசுகையில், கரோனா தடுப்பூசியின் தேவை, அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினாா். திட்ட அலுவா் ம.ராஜேஸ்வரி தலைமை உரையாற்றுகையில், அரசு சாா்பில் நடத்தப்படும் கரோனா தடுப்பூசி திருவிழாவில்
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொழில்நுட்ப அலுவலா் இரா.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...