வீட்டின் கதைவை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு
திருக்கோவிலூரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


திருக்கோவிலூரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கடலூா் சாலைப் பகுதியில் வசித்து வருபவா் கிருஷ்ணமூா்த்தி (66). இவரது மனைவி தமிழரசி, கடந்த 17-ஆம் தேதி கரும்பு வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற போது, பாம்பு கடித்து விட்டதாம். அவரை திருக்கோவிலூா் அரசு மருத்துவமனனயில் சோ்த்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு, மனைவியை அனுமதித்துவிட்டு கிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...