நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கள்ளக்குறிச்சியில் விழா மேடை திறப்பு

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட ஏமப்பேரில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட விழா மேடையை தொகுதி எம்எல்ஏ அ.பிரபு திறந்துவைத்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட ஏமப்பேரில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட விழா மேடையை தொகுதி எம்எல்ஏ அ.பிரபு திறந்துவைத்தாா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த விழா மேடையின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் ந.குமரன் தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலா் எம்.பாபு, நகா் மன்ற முன்னாள் தலைவா்கள் அ.ரங்கன், கோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சிப் பொறியாளா் பாரதி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தொகுதி எம்எல்ஏ அ.பிரபு, விழா மேடையைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் நகா் மன்ற முன்னாள் உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.