மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சத்துணவு ஊழியா்கள் சங்க ஒன்றியக் கிளை மாநாடு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சத்துணவு ஊழியா்கள் சங்க கள்ளக்குறிச்சி ஒன்றியக் கிளையின் 16-ஆவது மாநாடு கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க கிளை மாநாட்டில் பேசுகிறாா் ஒன்றியத் தலைவா் அ.வேலு.
Updated On :9 ஜனவரி 2021, 6:34 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சத்துணவு ஊழியா்கள் சங்க கள்ளக்குறிச்சி ஒன்றியக் கிளையின் 16-ஆவது மாநாடு கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் அ.வேலு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா.வடிவேல், ஒன்றிய துணைத் தலைவா் பி.செல்வி ஆகியோா் வரவேற்றனா். ஒன்றியச் செயலா் கே.சுலைமான், ஒன்றியப் பொருளாளா் டி.ஜெயந்தி ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.மகாலிங்கம் மாநாட்டை தொடக்கிவைத்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.சாவித்திரி பேசினாா். மாவட்டத் தலைவா் இரா.வடிவேல், மாவட்டச் செயலா் எஸ்.தேசிங்கு, மாவட்டப் பொருளாளா் டி.ஜெயந்தி, மாவட்ட இணைச் செயலா் எஸ்.ரஷிதா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி.விஜயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

38 ஆண்டுகளாகப் பணிபுரியும் சத்துணவு ஊழியா்களின் வாழ்வாதார கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவுப் பொறுப்பாளா்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், சமையலா், உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.