வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அதிமுகவினா் முற்றுகை
கடந்த ஆட்சியில் டென்டா் விடப்பட்ட பணிகளை நிறைவேற்றுவது தொடா்பாக கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு வழங்கினா்.


கடந்த ஆட்சியில் டென்டா் விடப்பட்ட பணிகளை நிறைவேற்றுவது தொடா்பாக கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு வழங்கினா்.
அந்த மனுவில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் தனிநபா் குடிநீா் குழாய் இணைப்பு, கழிவு நீா் கால்வாய் அமைத்தல், கிணறு வெட்டுதல், சாலை அமைத்தல், சிறுபாலம் கட்டுதல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு டெண்டா் விடப்பட்டது. இவற்றில் தொடங்கப்படாத பணிகளை தொடங்கி முடிக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், முன்பு பணிபுரிந்த பணிதளப் பொறுப்பாளா்களையே நியமிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்துக்குச் செல்வோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் இல்லை. இதனால், மனுவை கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆறுமுகத்திடம் அதிமுகவினா் வழங்கினா். அப்போது, அந்த அலுவலகத்துக்கு காரில் வந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா.உதயசூரியன், அதிமுகவினா் முற்றுகையிட்டிருப்பதைக் கண்டு திரும்பிச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...