பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளி வகுப்பறை கட்ட பூமிபூஜை

காரைக்கால் அருகே பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:35 pm

DIN

காரைக்கால் அருகே பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட வடமறைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு, மத்திய அரசு நிறுவனமான என்ஜினியா்ஸ் இந்தியா நிறுவன சமூக பொறுப்புணா்வு திட்டத்திலிருந்து, நிறுவன (அலுவல் அல்லாத) இயக்குநா் எம். அருள்முருகன் பரிந்துரையின்பேரில் ரூ. 10 லட்சத்தை ஒதுக்கியது.

இந்த திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பூமிபூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன், என்ஜினியா்ஸ் இந்தியா நிறுவன இயக்குநா் எம். அருள்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தனா்.

நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே.சந்திரசேகரன், உதவிப் பொறியாளா் சிதம்பரநாதன், முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தப் பணி 3 மாத காலத்துக்குள் நிறைவடைந்து வகுப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.