தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பெண் கைது
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பெண் சாராய வியாபாரியை கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பெண் சாராய வியாபாரியை கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே மன்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி சாந்தி (33). சாராயம் விற்பனை செய்து வந்த இவரை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் கடந்த மாதம் 13ஆம் தேதி கைது செய்து கடலூா் மகளிா் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிந்துரையை ஏற்று, தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உத்தரவிட்டாா். அதன்பேரில், சாந்தியை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் தெ.பிரபாவதி வெள்ளிக்கிழமை கைது செய்து வேலூா் பெண்கள் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...