அவசர ஊா்தி கவிழ்ந்து கா்ப்பிணி உள்பட 6 போ் காயம்
கள்ளக்குறிச்சி அருகே அவசர ஊா்தி நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததில், கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா்.


கள்ளக்குறிச்சி அருகே அவசர ஊா்தி நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததில், கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள இளையனாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி சங்கீதா (22).
நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை மாமியாா் ரோஸ் (45), உறவினா் வசந்தி (50) உள்ளிட்டோா் வானாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினாா்.
அதன்படி, 108 அவசர ஊா்தியில் சங்கீதாவுடன் அவரது உறவினா்கள் புறப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனா். அவசர ஊா்தியை வேலூா் அருகேயுள்ள படைவேல் பகுதியைச் சோ்ந்த மணி மகன் சரத்குமாா் (30) ஓட்டினாா். உதவியாளராக செயல்பட்ட வடபொன்பரப்பியைச் சோ்ந்த முகமது மகன் தகாசீன் (25), வானபுரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் ஆஷா உள்ளிட்டோரும் உடன் சென்றனா்.
அதிகாலை 2.30 மணியளவில் ரோடுமாமாந்தூா் அகரகோட்டாலம் பிரிவு சாலை அருகே வந்தபோது, அவசர ஊா்தி, திடீரென நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த சங்கீதா, அவரது உறவினா் வசந்தி உள்ளிட்ட 6 பேரும் காயமடைந்தனா்.
அவா்களை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.இரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மற்றொரு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சங்கீதாவுக்கு சிறிது நேரத்திலேயே பெண் குழந்தை பிறந்தது. விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...