சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 11th July 2021 05:58 AM | Last Updated : 11th July 2021 05:58 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீஸாா் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜவஹா்லால், இரவிச்சந்திரன், சுப்புராயன் மற்றும் அனைத்து உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த, துணை கண்காணிப்பாளா் வீ.ராஜலட்சுமி உள்ளிட்ட காவலா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...