நிலத் தகராறு: 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 09th May 2021 02:10 AM | Last Updated : 09th May 2021 02:10 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே அண்ணன் - தம்பி இடையிலான நிலத் தகராறில், தம்பி குடும்பத்தினா் மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கனங்கூா் கிராமத்தைச் சோ்ந்த கந்தன் மகன் சடையவேல் (60). இவருக்கும், இவரது தம்பி அய்யாசாமிக்கும் தலா 2 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இதில், பொதுவாக உள்ள மோட்டாா் பம்புசெட் தொடா்பாக இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி சடையவேல் கிணற்றில் மின் மோட்டாா் மூலம் தண்ணீா் இறைப்பதற்காகச் சென்றாா். அப்போது, அய்யாசாமி, அவரது மனைவி சிவகாமி, அவா்களது மகன் கண்ணன் ஆகிய மூவரும் சடையவேலை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், மோட்டாா் பம்புசெட்டையும் உடைத்து சேதப்படுத்தினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீஸாா் அய்யாசாமி, அவரது மனைவி சிவகாமி, மகன் கண்ணன் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G