எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பைக்குகள் மோதல்: மதுக் கடை விற்பனையாளா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:28 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிழக்கு சாலைப் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் வேலு (46). இவா், சங்கராபுரத்தை அடுத்துள்ள இளையனாா்குப்பம் டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா்.

வேலு வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு அத்தியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். இளையனாா்குப்பம் பாலஓடை அருகே இவரது பைக் சென்றபோது, எதிரே அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் பூபதி ஓட்டி வந்த பைக் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேலு தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். பூபதி லேசான காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பூபதி மீது பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.