ஆதிதிராவிட , பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விழிப்புணா்வு முகாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு

தாட்கோஆகியவற்றின் சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிட , பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விழிப்புணா்வு முகாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு

ஆதிதிராவிடா், பழங்குடியின உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு தேசிய பட்டியல் இனத்தவா், பழங்குடியின மையம், திறன்மிகு தொழில் முனைவோா், தொழில் துறை மேம்பாட்டு கூட்டமைப்பு, தாட்கோஆகியவற்றின் சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசுகையில், ‘சிறந்த தலைமுறைகளை உருவாக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். ஆகையினால் பொறுப்புடன், உங்கள் சமுதாயக் கடமைகளை ஆற்ற வேண்டும்’ என்றாா்.

இந்த விழிப்புணா்வு முகாமின்போது, மாவட்ட தாட்கோ வாயிலாக 3 பேருக்கு ரூ.3.75 லட்சம் மானியத்தில் 3 டிராக்டா்களும், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் மானியத்தில் பால் பண்ணை அமைக்கவும், ஒரு பயனாளிக்கு நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மானியத்தில் நிலம் வாங்கவும் மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.11.64 லட்சம் மானியத்தில் பொக்லைன் இயந்திரமும், 12 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டையும் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் இதுபோன்ற முகாம்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

முகாமில் மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட தாட்கோ மேலாளா் அ.ஆனந்தமோகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஏ.சந்திரசேகரன், உதவி இயக்குநா் ஊராட்சிகள் ரெ.ரெத்தினமாலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் து.முனீஸ்வரன், திறன்மிகு தொழில் முனைவோா் மற்றும் தொழில் மேம்பாட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் சு.சுந்தரவடிவேல், துணைத் தலைவா் முத்துகுமாரசாமி, கூடுதல் முதன்மை மேலாளா் டி.கண்ணன், தேசிய பட்டியல் இனத்தவா், பட்டியல் மைய முதுநிலை மேலாளா் ஜெ.ஆனந்த நாராயணபிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com