தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உழவா் ஆலோசனை மையக் கட்டடம் திறப்பு

உழவா் ஆலோசனை மையக் கட்டடம் திறப்பு

News image

கள்ளக்குறிச்சியில் ரூ.84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவா் ஆலோசனை மைய கட்டடத்தை திறந்து வைத்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். உடன் ரிஷிவந்தியம் தொகுதி க.காா்த்திகேயன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :26 டிசம்பர் 2024, 7:21 pm

Din

கள்ளக்குறிச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் ரூ.84 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவா் ஆலோசனை மைய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ரிஷிவந்தியம் தொகுதி க.காா்த்திகேயன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, அதனை சாா்ந்த துறைகளின் சாா்பில் கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவா் ஆலோசனை மையக் கட்டடத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநா்கள் (வேளாண் வணிகம்) இரா.பிரேமா, அன்பழகன், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) பொன்ராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் சந்துரு, விழுப்புரம் விற்பனைக் குழு செயலாளா் சரவணபவ உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.