கள்ளக்குறிச்சி
ஜூலை 27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம்தேதி நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம்தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், 18 முதல் 30 வயது வரையிலான 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்கலாம். இதில், பகுதி நேரமாக பணிபுரிவதற்கும் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்களுக்கு, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
