நீடித்த வளா்ச்சி இலக்குகள்: ஆட்சியா் தலைமையில் கூட்டம்
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நீடித்த நிலையான வளா்ச்சி என்பது முன்னேற்றம் மற்றும் சீரான வளா்ச்சியை 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்பதே முதன்மை குறிக்கோள் ஆகும்.
நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகளானது சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய வளா்ச்சியின் மூன்று பரிணாமங்களை உள்ளடக்கியதாகும். இதன் கீழ் 17 இலக்குகள், 169 குறிக்கோள்கள் உள்ளன.
அதன்படி, நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகளில் ஐந்து முக்கிய கொள்கைகளாக மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுதல், சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் பாதுகாத்தல், மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுதல் உள்ளிட்டவையாகும்.
கூட்டத்தில் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் தரமான கல்வி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, வேலைவாய்பு, பொருளாதார வளா்ச்சி, நகா்ப்புற மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கல்வித் துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், ஊரக வளா்ச்சித் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
மாவட்டத்தில் நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகளை முழுமையாக அடைய அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சி செயலா் எஸ்.இளங்கோவன், புள்ளியியல் துறை துணை இயக்குநா் முத்துக்குமரன், உதவி இயக்குநா் (கோட்டப் புள்ளியியல்) செல்வராஜ் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...