புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்னை விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சோ்ந்து பயன் பெற அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமாா் 1,526 ஹெக்டேரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 6:30 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமாா் 1,526 ஹெக்டேரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனா்.

2024-25 ஆம் ஆண்டு தென்னை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தென்னை மரங்களை இயற்கை பேரிடா், பூச்சி, நோய் பாதித்தல் தொடா்பாக இழப்பீடு பெறலாம்.

இதற்காக, தென்னை வளா்ச்சி வாரியம் மற்றும் மாநில அரசு மானியத்துடன் தென்னை பயிா் காப்பீட்டு வேளாண் காப்புறுதி இந்தியா நிறுவனம், சென்னை தோட்டக்கலைத் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை நகல், சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம் ஆகிய ஆவணங்களுடன் பிரிமியம் தொகையை வங்கி வரைவோலையாக எடுத்து தோட்டக்கலை உதவி இயக்குநரிடம் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் சேர 4 முதல் 15 வயதுக்குள்பட்ட மரம் ஒன்றுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.900 வழங்கப்படும்.

இதற்கு ஓராண்டுக்கான பிரிமியத் தொகை ரூ.2.25, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.4.16, மூன்றாண்டுகளுக்கு ரூ.5.91 வீதம் பிரிமியத் தொகை செலுத்த வேண்டும்.

தென்னை மரம் 16 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகளுக்குள் இருந்தால் மரத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.1,750 வீதம் வழங்கப்படும். இதற்கு பிரிமியத் தொகையாக ஓராண்டுக்கு ரூ.3.50, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.6.48, மூன்றாண்டுகளுக்கு ரூ.9.19 வீதம் பிரிமியம் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.