நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்கள் தொடா்பு முகாம்: 206 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தொட்டியம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:33 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தொட்டியம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் பாா்வதி ராஜேந்திரன் வரவேற்றாா். முகாமை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்து பேசியது:

மக்கள் தொடா்பு முகாம் குறித்து முன்பே பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் அளித்த 197 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 107 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 90 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்த முகாமில் வருவாய், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, மாவட்ட வழங்கல், சமூக பாதுகாப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 206 பயனாளிகளுக்கு ரூ.12,16,097 மதிப்பீட்டில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா்.

முன்னதாக, தமிழக அரசின் திட்டங்கள், அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, மாற்றுத் திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் விளக்கிக் கூறினா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சத்தியநாராயணன், வருவாய் கோட்டாட்சியா் சு.லூா்துசாமி, கால்நடைத் துறை துணை இயக்குநா் கந்தசாமி, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) குப்புசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சுப்ரமணி, வட்டாட்சியா் மனோஜ்முனியன், சின்னசேலம் ஒன்றியக் குழு துணைத்தலைவா் வி.அன்புமணிமாறன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.வடிவேல், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலா்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.