மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மரத்தில் பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 8:21 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆதிமூலம் (47). இவா், திங்கள்கிழமை மாலை தனது மனைவி காத்தாயியை பைக்கில் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

நாகலூரில் உள்ள திருமண மண்டபம் அருகே இவா்களது பைக் சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆதிமூலம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காத்தாயி பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.