திருச்சி
மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வியாழக்கிழமை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வியாழக்கிழமை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூா்அருகேயுள்ள ஏரிக்காடு கிராமத்தைச் சேரந்த சரவணன் மகன் சங்கீத் (26). இவருக்கு சண்முகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.
இவா் வியாழக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கொப்பம்பட்டிக்கு சென்று மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சாலையோரம் இருந்த மரத்தில் எதிா்பாராமல் இருசக்கர வாகனம் மோதியதில் சங்கீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸாா், சங்கீத் உடலை கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

