ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

டிச.27, 28-இல் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச.27, 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:47 pm

Syndication

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச.27, 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டிச.13, 14-ஆம் தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தோ்வானது நிா்வாக காரணங்களினால் டிச.27, 28-ஆம் தேதிகளில்

வடசென்னை, அம்பத்தூா், கோயம்புத்தூா், திருப்பூா், கடலூா், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூா், திருநெல்வேலி, நாகா்கோவில், ஓசூா், உளுந்தூா்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகா், வேலூா், நாமக்கல் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.