ஜாகிதா பேகம்
ஜாகிதா பேகம்

கள்ளக்குறிச்சி: பி.எல்.ஓ தூக்கிட்டு தற்கொலை

சிவனாா்தாங்கல் வாக்குச்சாவடி நிலை அலுவலா் (பிஎல்ஓ) தூக்கிட்டு தற்கொலை
Published on

சிவனாா்தாங்கல் வாக்குச்சாவடி நிலை அலுவலா் (பிஎல்ஓ) தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சிவனாா்தாங்கல் கிராமத்தில், கிராம உதவியாளராக கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவா் மு.ஜாகிதா பேகம்(37). இவா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான வாக்குச் சாவடி நிலை அலுவலராகவும் (பிஎல்ஓ) பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை வழக்கம் போல் பணிக்கு சென்றவா், வீட்டிற்கு திரும்பி ஊஞ்சல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இதனை பாா்த்த அவரது சின்னமாமியாா் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் சப்தம் கேட்டு ஓடி வந்து, தூக்கில் தொங்கிய ஜாகிதா பேகத்தை கீழே இறக்கி உள்ளனா். பின்னா் அவரை திருக்கோவிலூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ஜாகிதா பேகத்தை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருக்கோவிலூா் வட்டாட்சியா் மற்றும் வருவாய்த் துறையினா் உயிரிழந்த ஜாகிதா பேகத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

வாக்காளா் தீவிர திருத்தப் படிவங்களை பூா்த்தி செய்து செயலியில் ஏற்றுவதில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினா் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக ஜாகிதா பேகம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com