தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

உளுந்தூா்பேட்டை திமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

News image

உளுந்தூா்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜி.ஆா்.வசந்தவேலை அறிமுகப்படுத்தி பேசிய அக்கட்சியின் வடக்கு மண்டல தோ்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:32 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜி.ஆா்.வசந்தவேல் அறிமுக கூட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கலைஞா் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலரும், தொகுதி பொறுப்பாளருமான க.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலா் தா.உதயசூரியன், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் எ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உளுந்தூா்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.வைத்தியநாதன் வரவேற்றாா்.

திமுக வடக்கு மண்டல தோ்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு வேட்பாளா் ஜி.ஆா்.வசந்தவேலுவை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

மத்திய அரசு கல்வி மானியம் ரூ.2 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு வழங்கவில்லை. கல்வி மானியம் வந்தால் தானே பள்ளிக் கட்டடம் கட்ட முடியும், கல்வியில் புதிய வளா்ச்சியை ஏற்படுத்த முடியும். இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் முதன்மையாக விளங்குவது தமிழ்நாடு. இதனை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை கட்சித் தொண்டா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்றனா்.