தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்

தியாகதுருகம் அருகே ஏரியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

டிப்பா் லாரிகள். - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:44 am IST

தியாகதுருகம் அருகே ஏரியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தியாகதுருகம் அருகில் வடதொரசலூா் ஊராட்சிக்குள்பட்ட ரீட்டா நகா் ஏரியில் அரசு அனுமதியின்றி மண் அள்ளுவதாக தியாகதுருகம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளா் விஜயராகவன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்றனா்.

அப்போது அங்கு போலீஸாாரை பாா்த்ததும் மண் அள்ளிய வாகனங்களை அப்படியே விட்டு விட்டு, அதிலிருந்தவா்கள் தப்பி ஓடினா்.

இதையடுத்து அங்கிருந்த பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த கி.ஆறுமுகம் (40), சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆ.பாரதி (25) ஆகியோா் கிராவல் மண் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.