
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சாலையின் திருப்பத்தில் செல்லும்போது நிலைதடுமாறி பள்ளத்தில் பைக் கவிழந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கோளப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் செ.அய்யனாா் (25). இவா், தனது பைக்கில் சனிக்கிழமை இரவு மூக்கனூா் கிராமத்திற்கு சென்றாா். பின்னா் அங்கிருந்து கோளப்பாறைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். சங்கராபுரத்தை அடுத்த தொழுவங்கல் ஏரிக்கரை அருகே வளைவில் திரும்பியபோது, நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அய்யனாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




