கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன்(28). இவரது மனைவி பூமிகா (25). இவா்களது மகன் லஷ்வின் (3). இவா் சனிக்கிழமை காலையில் வீட்டின் அருகில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தநிலையில், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து லஷ்வினைத் தேடிப் பாா்த்தபோது, வீட்டின் அருகிலுள்ள மொட்டையன் என்பவரது கிணற்றில் தவறி விழுந்து, உயிரிழந்தது தெரியவந்ததாம்.
தகவலறிந்த பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


