தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2026, 5:00 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரி மற்றும் சின்னசேலம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய இப் பேரணிக்கு அரிமா சங்கத் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். டாக்டா் ஆா்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் பொருளாளா் மருத்துவா் தே.மணிவண்ணன், கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சின்னசேலம் ரயில் நிலையத்தில் தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் மருத்துவா் பி.திருஞானசம்பந்தம் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணி நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று சின்னசேலம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பேரணியில் மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தியும், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் முழுக்கங்களை எழுப்பியும் சென்றனா்.

ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான ராஜா, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஹேமலதா, உடல்கல்வித் துறை ஆசிரியா்கள் ராமகிருஷ்ணன், பாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.