/
வரஞ்சரம் அருகே மாரடைப்பால் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் செ.மாரிமுத்து (32). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை நெஞ்சு வலிப்பதாக, அவரது தாய் ஜோதியிடம் தெரிவித்தாராம்.
உடனே மாரிமுத்துவை கொங்கராபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மாரிமுத்து ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அங்கேயே வைத்து விட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல்

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

முதியவா் மா்மமான முறையில் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



