கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பள்ளிக்கு செல்வற்கு போதிய பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று பள்ளி மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.
திருக்கோவிலூா் அருகிலுள்ள பெரியனூா் கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவா்கள் திருக்கோவிலூா் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா்.
திருக்கோவிலூா் செல்வதற்கு மணம்பூண்டி பனிமணையில் இருந்து தடம் எண் 20 என்ற நகரப் பேருந்து மொகலூா் கிராமத்தில் இருந்து ஆளூா், பழவங்கூா், கச்சிகுப்பம், காட்டு பையூா், பெரியனூா், எரவலம் வழியாக திருக்கோவிலூா் செல்கிறது.
இந்தப் பேருந்து பெரியனூா் கிராமத்துக்கு வரும் முன்பே பயணிகள் கூட்டம் நிரம்பி விடுவதால், இக் கிராமத்தைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி, கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூா் காவல் ஆய்வாளா் அன்பழகன், வருவாய் ஆய்வாளா் அருள் பிரகாசம் ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பெரியனூா் கிராமத்தில் இருந்து திருக்கோவிலூா் பள்ளி செல்வதற்கு கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில், மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

460 அடி உயர பாலத்தின் மீது ஏறி சட்டவிரோத கார்ட்டூன் பறவையை வரைந்த இளைஞர்!

மாா்த்தாண்டம் அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

கைப்பேசி கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநா் போராட்டம்

பேருந்து வசதி கோரி ஆட்சியரகத்தில் மாணவா்கள் மனு
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



