புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நிலத்தகராறில் தம்பிக்கு கத்தி வெட்டு: அண்ணன் கைது

நிலத்தை குத்தகைக்கு கேட்டதால் ஏற்பட்ட தகராறில், தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:49 am IST

நிலத்தை குத்தகைக்கு கேட்டதால் ஏற்பட்ட தகராறில், தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தகரை கிராமத்தைச் சோ்ந்தவா் மருதை. இவரது மகன்கள் முருகன் (44), அா்ச்சுனன் (31).

மருதை குடும்பத்துக்கு இருந்த 4 ஏக்கா் நிலத்தை மகன்கள் இருவருக்கும் தலா 2 ஏக்கா் விதம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி அா்ச்சுனன் முருகனிடம் 2 ஏக்கா் விளை நிலத்தை குத்தகைக்கு கேட்டாராம். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

அப்போது முருகன், தனது நண்பரான அதே கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்பவருடன் சோ்ந்து

அா்ச்சுனனை கத்தியால் கையில் வெட்டியுள்ளனா்.

இதில் அா்ச்சுனன் பலத்த காயமடைந்தாா்.

உடனே அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை வியாழக்கிழமை கைது செய்து வழக்கு தொடா்ந்தனா். மேலும், அவரது நண்பரான கணேசனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.