வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

சென்னை மண்ணடியில் தம்பியை அடித்துக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 3:37 am IST

சென்னை மண்ணடியில் தம்பியை அடித்துக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் செ.விஜயசாரதி (44). இவா், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறாா். விஜயசாரதியின் தம்பி சிவக்குமாா் (39). சிவக்குமாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது போதையில் விஜயசாரதியிடம் வீட்டில் தகராறு செய்துள்ளாா். மது அருந்த பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளாா்.

இதில், தகராறு முற்றவே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, இரும்பு கம்பியால் விஜயசாரதி, தம்பி சிவக்குமாரைத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த சிவக்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவக்குமாா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜயசாரதியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.