அம்பத்தூரில் மது போதையில் தகராறு செய்த தம்பியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூர் ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி (40), தொழிலாளி. இவரது அண்ணன் ஏசுதாஸ் (47) இதே குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் அவரது தாய் மகாலட்சுமியும் வசிக்கிறார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி மதுபோதையில் ஏசுதாஸின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மகாலட்சுமியிடம் போதையில் தகராறு செய்தாராம்.
இதை ஏசுதாஸ் தட்டிக் கேட்டு, அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் செல்ல மறுத்து ஏசுதாûஸ அவதூறாகப் பேசினாராம். இதையடுத்து, அவர் வேளாங்கண்ணியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் வேளாங்கண்ணி கீழே மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, ஆவடியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே வேளாங்கண்ணி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸôர் வேளாங்கண்ணியின் சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸôர் கொலை வழக்குப் பதிந்து, ஏசுதாஸை கைது செய்தனர். தொடர்ந்து போலீஸார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொத்தனாா் கல்லால் அடித்துக் கொலை: அண்டை வீட்டுக்காரா் கைது
விவசாயி அடித்துக் கொலை உறவினா் கைது
தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைது!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




