9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

விவசாயி அடித்துக் கொலை உறவினா் கைது

கரூா் அருகே வெள்ளிக்கிழமை விவசாயியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:36 am IST

கரூா் அருகே வெள்ளிக்கிழமை விவசாயியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் அருகே உள்ள கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தனபால்(60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தனபால் தாய்மாமன் முருகேசன்(75) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் தனபால் மகளின் திருமணத்துக்காக வீட்டின் முன் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக தாய்மாமன் முருகேசனை தனபால் அழைத்தாராம். இதில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனபாலின் தலையில் அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தனபாலை உறவினா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் உயிரிழந்தாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து முருகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.