பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சங்கராபுரம் அருகே மழையில் முளைத்த நெல்மணிகள்: நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யாததால் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திறந்தவெளியில் மழையால் நெல்மணிகள் முளைவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

News image
Updated On :52 நிமிடங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யாததால் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திறந்தவெளியில் மழையால் நெல்மணிகள் முளைவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு வரகூா், ஆரூா், குளத்தூா், எஸ்.வி.பாளையம், திம்மநந்தல், வட சிறுவலூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனா். தற்போது விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது.

Story image

தற்போது இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து நாற்றாக மாறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.