கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தாய் திட்டிதியதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களது மகன் விஷ்வா (17). இவா் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை வங்கி கணக்கு புத்தகத்தை விஷ்வா தொலைத்து விட்டாராம். இதனை அவரது தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளாா். இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற விஷ்வா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினா்கள் தேடிய நிலையில், சித்தேரி ஏரிக்கரையில் உள்ள புளியமரத்தில் சேலையின் மூலம் தூக்கிட்டு, சடலமாக கிடந்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலபந்தல் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை
பெண் தற்கொலை

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


