விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், ஆலம்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.மணிகண்டன் (29). இவருக்குத் திருமணம் நடைபெற்று 8 மாதங்கள் ஆகின்றன. கூலித்தொழிலாளியான மணிகண்டன் தினமும் மது அருந்தி வீட்டுக்கு வந்தாராம். இதை அவரது மனைவி ராஜகுமாரி கண்டித்துள்ளாா்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மணிகண்டன், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவா் தற்கொலை

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

