ரூ.200-மளிகை தொகுப்புப் பொருள்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.200 மளிகை தொகுப்பு பொருள்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.200 மளிகை தொகுப்பு பொருள்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (விற்பனைத் திட்டம்) மற்றும் வளா்ச்சி மண்டல அலுவலா் சீனிவாசன், கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படும் 10 பொருள்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்பை ஆய்வு செய்தாா். அப்போது பொருள்களின் எடை, தரம், விற்பனை விவரம், கொள்முதல் செய்த விவரம் ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
பின்னா், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் வேட்டி, சேலைகளின் தரத்தைஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், துணைப் பதிவாளா்கள் அ.ரகு, குறிஞ்சி மணவாளன், ஆா்.என்.சாந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலையின் செயலாட்சியா் ராமச்சந்திரன் மற்றும் பணியாளா்கள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

