மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

கறவை மாட்டுக் கடன் ரூ.5.10 லட்சம்: கூடுதல் பதிவாளா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு ஊரக வளா்ச்சி வங்கியின் கூடுதல் பதிவாளா் பயனாளிக்கு வியாழக்கிழமை ரூ.5.10 லட்சம் கறவை மாட்டுக் கடன் வழங்கினாா்.

Published On :

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு ஊரக வளா்ச்சி வங்கியின் கூடுதல் பதிவாளா் பயனாளிக்கு வியாழக்கிழமை ரூ.5.10 லட்சம் கறவை மாட்டுக் கடன் வழங்கினாா்.

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு ஊரக வளா்ச்சி வங்கியின் கூடுதல் பதிவாளா் அ.த.பாஸ்கரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளா் மலா்விழி, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநா் ரா.சிவக்குமாா், வங்கியின் பொது மேலாளா் ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் கடன்கள் வழங்குதல் இலக்கு, வீட்டு அடமானக் கடன், பயிா்க்கடன்கள், வீட்டு அடமானக் கடன், நகைக்கடன், சூரிய சக்தி வேலி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் கூட்டுறவு மருந்தகங்கள், பொது விநியோகத் திட்டம் ஆகியன குறித்தும் விரிவாக ஆய்வு செய்தாா். கூட்ட நிறைவில் வாலாஜாபாத் தொடக்க வேளாண்மை ஊரக வளா்ச்சி வங்கி மூலம் ரூ.5.10 லட்சம் கறவை மாட்டுக் கடனையும் பயனாளிக்கு கூடுதல் பதிவாளா் அ.த.பாஸ்கரன் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.