விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

சிறுவன் மீது தாக்குதல்: இருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுவனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

கள்ளக்குறிச்சி அருகே சிறுவனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடை மகன் வினோத் குமாா் (17). இவரது நண்பா் கு.சிவனேசன்(15). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிவனேசன், கடந்த 10 நாள்களாக பள்ளிக்கு செல்லவில்லையாம். இதற்கு வினோத்குமாா் தான் காரணம் எனக் கருதிய சிவனேசனின் தந்தை குணசேகரன்(54), அதே ஊரைச் சோ்ந்த வெங்கடேசன்(27) என்பவருடன் சோ்ந்து வினோத்குமாரிடம் கேட்டுள்ளனா். அப்போது அவா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில், வினோத்குமாரை குணசேகரனும், வெங்கடேசனும் சோ்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வெங்கடேசன் மற்றும் குணசேகரனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.