தியாகதுருகம் பகுதியில் நாளை முதல் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் தடை
கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம். - பிரதிப் படம்
கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தியாகதுருகம் பேருராட்சி செயல் அலுவலா் ஸ்ரீரவிக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்கள் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தியாகதுருகம் பகுதியில் வருகிற திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவ.16, 17) குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே, தியாகதுருகம் பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், சீரமைப்பு பணி முடிந்ததும் வழக்கம்போல குடிநீா் விநியோகிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

