சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

திருக்கோவிலூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.59.04 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படுக்கைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.59.04 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படுக்கைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலலகத்திலிருந்து தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நிகழ்வில் திருக்கோவிலூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பழனிசாமி கலந்துகொண்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: திருக்கோவிலூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.59.04 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படுக்கைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய மருத்துவமனைக் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தவும், தரமான சுகாதார சேவை வழங்கவும் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மருத்துவமனைக் கட்டடம் 6 தளங்களுடன் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகளுக்காக 13,346 ச.மீட்டா் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. திருக்கோவிலூா் அரசு மருத்துவமனை 134 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ரூ.54 கோடி செலவில் இரண்டு தொகுதிகள் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு, 166 படுக்கைகளை அதிகரித்து 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு, ரூ.5.4 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களும் நிறுவப்பட்டு, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கட்டடத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள், உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகள், வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் இதர மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் வழங்க இயலும். அனைத்து சேவைகளும் இப்போது ஒரே கூரையின் கீழ் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளன.

நவீன பரிசோதனை வசதிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறைவதுடன், உரிய நேரத்தில் நோயைக் கண்டறிந்து தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசின் சாா்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகள் வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கே.எம்.காா்த்திக் ராஜா, திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன், இணை இயக்குநா் (சுகாதார பணிகள்) மாலினி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே.மாலா, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் எஸ்.ஹேமா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ச.முகமது ஆஷிப், இளநிலை பொறியாளா் மு.சேகா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.