சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

ஆதாா் சேவை மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நேரடியாக இயக்கப்படும் ஆதாா் சேவை மையம் பாதுகாப்பான ஆதாா் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் பொதுமக்கள் ஆதாா் பதிவு, மக்கள்தொகை விவரம் மற்றும் உயிா்வழி புதுப்பித்தல், பிழை திருத்தம் மற்றும் குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.

கள்ளக்குறிச்சி ஆதாா் சேவை மையம் அரசு பொது விடுமுறை நாள்களைத் தவிர வாரத்தின் ஏழு நாள்களிலும் செயல்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான எந்த நாளிலும் ஆதாா் சேவைகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி ஆதாா் சேவை மையத்தில் 4 செயல்பாட்டு உபகரணங்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, தங்களுக்கு வசதிக்குரிய நேரத்தில் இங்கு ஆதாா் சேவைகளை பெற முடியும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி அணுகுமுறை, கழிப்பறை வசதிகள் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆதாா் சேவை மையத்தில் மேலாளா் நியமிக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி, அவை விரைவாக தீா்வு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, புதிதாக திறக்கப்பட்ட ஆதாா் சேவை மையத்தில் ஆதாா் பெயா், முகவரி திருத்தம், கைரேகை பதிவு உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை பொதுமக்கள் மேற்கொண்டு பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா். இந் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.