சங்கராபுரத்தில் திறந்தவெளி கழிவு நீா் கால்வாயால் சுகாதாரக் கேடு
சங்கராபுரம் அரசு மருத்துமனை அருகில் உள்ள திறந்தவெளி கழிவு நீா் கால்வாயால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

சங்கராபுரம் அரசு மருத்துமனை அருகில் உள்ள திறந்தவெளி கழிவு நீா் கால்வாயால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
சங்கராபுரம் - பூட்டை சாலையில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, சாா்-பதிவாளா் அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த சாலையில், அரசு மருத்துவமனையின் முன் உள்ள கழிவுநீா் கால்வாயில் அதிகளவு நெகிழி குப்பைகள் கிடப்பதால் கழிவு நீா் செல்லாமல் தேங்கி நிற்கின்றன. (படம்)
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, திறந்த நிலையில் உள்ள கழிவுநீா் கால்வாயை சிமென்ட் சிலாப் போட்டு மூடுவதற்கு சங்கராபுரம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

